15 Jul 2018

குறை மனிதனின் அடையாளங்கள்

குறை மனிதனின் அடையாளங்கள்
நீங்கள் என்ன சொன்னாலும்
அவைகள் என்னுடைய கோபங்கள்
அவைகள் என்னுடைய கவலைகள்
அவைகள் என்னுடைய பலஹீனங்கள்
நீங்கள் சொல்கிறீர் என்று
நானும் தூக்கி எறிந்தால்
அவைகள் எங்கே போகும்?
அவைகளுக்கு நானே துணை
எனக்கு அவைகளே துணை
நீங்கள் முழு மனிதனாக்க வேண்டாம்
குறை மனிதனாகவே இருந்து விட்டுப் போகிறேன்
என்னுடைய கோபங்கள்
என்னுடைய கவலைகள்
என்னுடைய பலஹீனங்கள்
எனக்கான அடையாளங்கள்
அப்படியே இருந்து விட்டுப் போகிறேன்.
*****

No comments:

Post a Comment