10 Jul 2018

இகலோக நம்பிக்கைகள்


இகலோக நம்பிக்கைகள்
கடலைக் குடிக்க முயன்று
தோற்றுக் கொண்டிருந்த மீன்குஞ்சு
கடல் தன்னைக் குடித்து விட்டதாக
புலம்பித் திரிந்தது
ஒரு பெரிய மீன் சிறிய இம்மீன்குஞ்சை
விழுங்கிய போது
கடல் இப்பெரிய மீனை விழுங்கி விடும்
என்ற நம்பிக்கையோடு இருந்தது
நம்மை விழுங்கிய காலம்
நம்மை விழுங்கியவர்களையும்
விழுங்கி விடும் என்ற நம்பிக்கையில்
ஓடிக் கொண்டிருக்கிறது இவ்வாழ்க்கை.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...