9 Jun 2018

வஞ்சனைகள் புரிதல்


வஞ்சனைகள் புரிதல்
செய்கின்ற பாவங்கள்
சற்று அதிகமாகத்தான் இருக்கின்றன
எறும்புகள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி
கரப்பான் பூச்சிகளுக்கு தெளிப்பு மருந்து அடித்து
எட்டுக்கால் பூச்சிகளைத்
துடைப்பக் கட்டைகளால் துடைத்து எறிந்து
வறுத்து வைத்து இருக்கும் மீன்களுக்காக
பூனைகளைத் துரத்தி அடித்து
காவல் காக்கும் நாய்களை
நடுநிசி வேட்டைக்கு அனுப்பி
கிடாக் குட்டியின் ஈரலைப் புசிக்கும் இந்நேரம்
அதற்கு மேல் வஞ்சனைகள் புரிய விருப்பமின்றி
மீந்திருக்கும் பட்சணங்களை
பசியோடு வரும் பிச்சைக்காரனுக்கு இட்டு
சற்று நேரத்தில்
வேட்டைக்கு நடுவில் வீடு திரும்பும்
தொடைக்கறியைப் பிடுங்கும்
ரத்தம் ஒழுகும் நாய்களின் வாய்களை
கற்பனையில் பார்த்து சிரித்துக் கொள்கிறான்
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
தேவைப்படும் போது பாவ மன்னிப்பு கோரிக் கொள்ளும்
உல்லாச வீடு கட்டி ஒதுங்கிய ஒரு கனவான்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...