9 Jun 2018

லாயக்கற்றப் புன்னகைகள்

லாயக்கற்றப் புன்னகைகள்
உன் கோபத்தின் நிராகரிப்பை
புன்னகையால் கடந்து சென்ற போது
விரிசல் அதிகமானது
ஒரு சிறு புன்னகை
உறவைப் பிரிக்குமா என்று
ஆச்சரியமாக இருந்தது
வன்மத்தைக் கையாள
புன்னகைகள் லாயக்கற்றவை என்பதை
மினரல் வாட்டரில்
மீன் வளர்க்க ஆசைப்படும்
என்னிடம் எப்படி
புரிய வைப்பேன் நான்
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...