9 Jun 2018

மலர்ச்சி என்பது முடிவு


மலர்ச்சி என்பது முடிவு
            மலர்ந்து விட்ட மலர் மீண்டும் மலர்வதற்கு எதுவும் இல்லை.
            அது முடிவுக்கு வந்து விட்டது.
            உள்ளுக்குள் இருக்கும் அமைதி மலர்ந்த பின் அங்கே மலர்வதற்கு எதுவும் இல்லை. தேடுவதற்கு அங்கே எந்தப் பொருளும் இல்லை.
            அது முடிவுக்கு விட்டது.
            அங்கே எல்லாம் நின்று விட்டன.
            அதற்கு மேல் அங்கே எதுவும் இல்லை.
            மீண்டும் ஓர் அமைதி என்று எதுவும் இல்லை.
            முடிவில் ஒரு தொடக்கம் என்று எதுவும் இல்லை. அப்படி இருக்குமானால் அடைந்தது ஒரு முடிவே இல்லை.
            பிறந்த பின் மரணம்தான்.
            தொடங்கிய பின் முடிவுதான்.
            மரணத்துக்குப் பின் விழிப்பு என்றால் நேர்ந்தது மரணமே இல்லை.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...