8 Jun 2018

தீர்வுகள் தீர்க்கப்படுவதற்கில்லை!


தீர்வுகள் தீர்க்கப்படுவதற்கில்லை!
            ஒரு ------------------------------ க்கு என்னதான் தீர்வு? என்கிறார் எஸ்.கே.
            தீர்வுகளால் என்ன தீர்வு வந்து விடும்?
            ஆயிரமாயிரம் தீர்வுகள் இருக்கலாம். அதி அற்புதமான தீர்வு கூட அதில் ஒன்று இருக்கலாம். அதனாலென்ன? தீர்வுகள் வருங்காலத்துக்குத்தான் பயன்படும்.
            வருங்காலம் என்பது வந்து கொண்டே இருக்கும். ஆனால், வராது. வந்தால் அது வருங்காலம் இல்லை. ஆம், நாளை என்பது இன்னொரு நாளை.
            அந்த வருங்காலத்துக்குத்தான் தீர்வுகள் பயன்படும், நிகழ்காலத்துக்கு அன்று.
            நிகழ்காலத்துக்கு செயல்கள்தான் பயன்படும்.
            வாயைப் பிளந்து கொண்டு இருக்கும் வரையில் தீர்வுகள் வந்து கொண்டே இருக்கலாம்.
            பிளந்த வாயைக் கொஞ்சம் அசைத்து ஏதேனும் கேள்வி ஒன்றைக் கேட்கத் துவங்கினால் ஒருவேளை செயல்கள் நிகழ்காலத்தில் வந்து குதிக்கலாம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...