7 Jun 2018

புது வகை எழுத்து


புது வகை எழுத்து
            இது என்ன வகை எழுத்து என்கிறார்கள்? எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே எழுத்தும் எழுத்து இது.
            இதில் ஏதேனும் புரியவில்லை என்றால் நாம் அப்படித்தான் இருக்கிறோம். புரிந்து விட்டால் வேறோன்றுமில்லை.
            இந்த நூற்றாண்டுக்கான எழுத்து இப்படித்தான் எழுதப் பெறும்.
            சுவாரசியத்திற்காக இதை வாசித்து விட முடியாது.
            அதற்கு டி.வி., டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் இருக்கின்றன. அதில் அவர்கள் அதை செய்வார்கள். நல்லது, கெட்டது என்று பிரித்துக் காட்டுவார்கள். அதை விட இது நல்லது என்ற வார்த்தை அவர்களிடம் எப்போதும் இருக்கும்.
            உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்பவர்கள் மிகவும் குறைவு.
            வாழ்வின் உண்மையான சுவாரசியங்கள் அப்படித்தான் இருக்கின்றன சுவாரசியமற்று.
            பொழுதுபோக்குச் சாதனங்கள் தரும் மோசமான சுவாரசியத்தை உண்மை தராது. அது சலிப்பற்ற தன்மையில் சுவாரசியமற்று இருக்கிறது. அதை உணர்ந்து கொண்ட பின் சுவாரசியத்திற்கு வேலையில்லை.
            எதையும் சட்டென்று கடந்து விட முடியாதுதான். ஆனால் துரதிர்ஷ்டம் அப்படித்தான் சட்டென்று கடந்து விடுவோம். அதை அப்படித்தான் சொல்ல முடியும். அதுவே இந்த எழுத்தை எந்த வகைமையிலும் அடங்காத எழுத்தைப் போலக் காட்டி விடலாம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...