6 Jun 2018

நிறைய ஆச்சர்யங்கள்


நிறைய ஆச்சர்யங்கள்
            தயாரிப்பவர்களுக்கு அதற்கான விளக்கங்கள், செய்முறைக் குறிப்புகள் தேவைதான்.
            கவிதைகளைத் தயாரிப்பதற்கான ஒன்றாகப் பார்க்க முடியாது. அது அதுவாகத் தோன்றுகிறது.
            சூழ்நிலைகள், அறிகுறிகள் தென்பட்டால் தோன்றுகிறது. தேவை என்றால் உருவாகி விடுகிறது.
            தயாரிக்கப்படும் கவிதைகளும் இருக்கின்றன.
            அதற்கான உத்திகள் கவிஞர்களுக்குள் முன்பு இருந்திருக்கக் கூடும். காலப் போக்கில் உதிர்ந்து விடுகின்றன. உத்திகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
            அது ஒரு மின்னலைப் போல் பளிச்சிடுகிறது.
            மின்னல் எப்போது பளிச்சிடும் என்பதைச் சொல்லத் தெரிவதில்லை. அதைப் பளிச்சிடச் செய்யும் முயற்சிகள் எதுவும் அப்போது இருப்பதில்லை. ஒன்று அதுவாகப் பளிச்சிட வேண்டும். அல்லது பளிச்சிடும் வரை காத்திருக்க வேண்டும்.
            அதே நேரத்தில் ஒர் இதழுக்கான கவிதைகளைத் தயாரிக்க முடியும். போட்டிகளுக்கானக் கவிதைகளையும் தயார் செய்ய முடியும். அதற்கானப் புத்தகங்கள், வழிகாட்டிகள், விளக்கங்கள் சந்தையில் நிறையவே இருக்கக் கூடும். அதற்கானத் தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கக் கூடும்.
            ஒருவர்க்குப் பிடித்தம் என்றால் அவைகளைத் தேர்ந்து கொள்ளலாம். அது விருப்பம் சார்ந்தது.
            கவிதை மின்னல் போல் - தோன்றுவது மறைவது போல் - தோன்றுகிறது.
            எழுதிய கவிதைகளை மனப்படமாகச் சொல்பவர்கள் இருக்கக் கூடும். அப்படி ஒரு நிலை எப்படி மற்றொரு கவிதையைப் பிரசவிக்கிறது என்பது ஆச்சர்யம்தான். பூமியில் நிறைய ஆச்சர்யங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன கவிதைகள் தயாரிப்பதைப் போல.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...