4 Jun 2018

பூனையும் மொசக் குட்டியும்


பூனையும் மொசக் குட்டியும்
திட்டுத் திட்டாய் கருமேகம்
எலிகளைப் போல ஓடி
அவைகளைத் தின்று கொழுத்த
கருப்புப் பூனை போலாகிறது
திடுமென கருத்த முடிகளெல்லாம் நரைத்து
உதிரத் தொடங்குவது போல
மழைப் பொழியத் துவங்குகிறது
அழுக்கைக் கழுவி பூமியில் ஊத்தி விட்டு
வெண்பற்கள் காட்டிச் சிரிக்கிற சிரிப்பில்
கருப்புப் பூனை காணாமல் போக
வெண்பஞ்சு நிறத்தில்
ஒரு மொசக்குட்டி
நீலப் பட்டாடை மேல் கண் துஞ்சுகிறது
காணாமல் போன கருப்புப் பூனை
மெல்ல அடியெடுத்து வந்து
கருப்புப் போர்வைப் போர்த்தி விட்டது போல
மெல்ல கவியத் தொடங்குகிறது இரவு
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...