4 Jun 2018

இசை நாற்காலிகள் மாயமாகின்றன!

இசை நாற்காலிகள் மாயமாகின்றன!
இசை அதிர்ந்து கொண்டிருக்கிறது
சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு
திடீரென இசை நிற்கும் போது
நாற்காலிகள் மாயமாகின்றன
ஒருவர் வெளியேறுவதற்குப் பதிலாக
எல்லாரும் தோற்றபடி வெளியேறுகிறார்கள்
விளையாட்டு முடிந்து விட்டதாக
நீதிபதிகள் அறிவிக்கிறார்கள்
தோற்றவர்கள் அதிகமிருப்பதால்
கடைசியாக எஞ்சி இருக்கும் நாற்காலியில்
நீதிபதிகளில் ஒருவரே அமர்ந்து கொள்ள தீர்ப்பாகிறது
மாயமாய் மறைந்த நாற்காலிகளில் ஒன்று
உடன் தோற்றம் பெறுகிறது
கொலை கொலையாய் முந்திரிக்கா என
அடுத்த விளையாட்டை
ஆடத் தொடங்குகிறார்கள் வெளியேற்றப்பட்டவர்கள்
நீதிபதிகள் ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்குகிறார்கள்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...