14 Jun 2018

நாம் யார்?


நாம் யார்?
            எப்போதும் கேள்விகள் பயங்கரமாகத்தான் இருக்கிறது. பதில்களும் பக்கத்தில்தான் இருக்கிறது. அந்த பதில்கள் பல நேரங்களில் எடுபடுவதில்லை.
            அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களைத் தமிழகத்தின் உச்சபட்ச நட்சத்திரம் ஒருவர் சந்திக்கிறார்.
            அவர் யார் என்று கேட்டால்... சின்னக் குழந்தையும் சொல்லும்.
            ஆனால் நிலைமை...
            யார் நீங்க? என்று பாதிக்கப்பட்ட ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.
            நான்தான் ... என்று ஆரம்பித்து அவர் தன் பெயரைச் சொல்கிறார்.
            கேள்விக்குப் பொருத்தமானப் பதில் வந்து விட்டது. பொருத்தமானப் பதிலாக இருந்தும் அது எடுபடவில்லை.
            ஆன்மிகத்தில் எதிர்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படும் நான் யார்? என்ற கேள்வியை விட, நீ யார்? என்ற கேள்வி வலுவாக இருக்கிறது.
            ஆன்மிகமாக இருந்தால் நான் யார்? என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அரசியலாக இருந்தால் நீ யார்? என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆன்மிக அரசியல் என்றால் இரண்டையும் சேர்த்து எதிர்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
            அத்தோடு பொதுமக்களும் வாக்களிக்கும் முன் நாம் யார்? என்ற கேள்வியை எதிர்கொண்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதிலும் நிலைமை... இரண்டாயிரம் நோட்டைக் கொடுப்பவர் யார்? என்ற கேள்வியையே அதிகம் எதிர்கொள்கிறார்கள்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...