15 Jun 2018

இந்த நாள் விற்பனைக்கு!


இந்த நாள் விற்பனைக்கு!
இந்த நாள் எனக்குப் பிடிக்கவில்லை
வாய்ப்பு இருக்குமானால்
இன்றைய நாளை நீக்கி விட்டால் தேவலாம்
வலிகள் நிறைய தருகிறது
வேதனைகளை நினைவூட்டுகிறது
இழப்புகள் மிக அதிகம்
பகலை எப்படியோ கடந்த பின்
இரவைக் கடப்பது பயங்கரமாக இருக்கிறது
கனவுகளின் கோரப் பிடியில்
விழித்தெழுந்து அழ நேரிடலாம்
இந்த ஒரு நாள் இல்லாமல் இருந்தால்
காலத்தின் பாதங்களில்
ஆயிரம் கோடி வணக்கங்களைச் செய்வேன்
இற்றை நாள் இல்லாமல் போவதற்கான
பிரார்த்தனையில் நான் ஆழ்ந்து கிடக்கிறேன்
எனக்குப் பிடிக்காத இந்த நாளை
யாரேனும் வாங்கிக் கொள்வார்களோ என
ஒரு ரூபாய்க்கு என்னோடு சேர்த்து
இந்த நாள் இலவசம் எனும்
பெயர்ப் பலகையோடு அமர்ந்திருக்கும் என்னிடம்
பேரம் பேசாமல் கடந்து செல்லாதீர்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...