18 Jun 2018

காலா - திரை விமர்சனம்


காலா - திரை விமர்சனம்
            இப்போதெல்லாம் திரைப்படங்களைக் குறித்து எதுவும் எழுதுவதில்லையே என்கிறார்கள்.
            திரைப்படம் பார்த்தே நாளாகி விட்டது.
            பேஸ்புக், டிவிட்டர் சமயங்களில் வாட்ஸ் அப்பில் வரும் விமர்சனங்களைப் படிக்கும் போதே திரைப்படம் பார்த்த உணர்வு வந்து விடுகிறது. அதற்கு மேல் திரைப்படம் பார்க்கத் தோணுவதில்லை.
            அப்படியே தோன்றித் திரையரங்கம் சென்றாலும் நேத்தியே அந்தப் படத்தைத் தூக்கிட்டோம்பா என்கிறார்கள். அப்புறம் அங்கே ஓடுகின்ற ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து விட்டு வர வேண்டியிருக்கிறது.
            அந்தப் படத்தைப் பார்த்து முடிப்பதற்குள் டூவீலர் நிறுத்துவதற்குக் கட்டணம் செலுத்தி, பத்து ரூபாய் பாப் கார்னை இருபது ரூபாய்க்கு வாங்கி, இடைவேளை வருவதற்குள் எடுக்கும் தாகத்துக்கு முப்பது ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்கி மொத்தத்தில் பாக்கெட்டைக் காலி பண்ணி அனுப்புகிறார்கள். படம் பார்த்த மூடே பல நேரங்களில் வருவதில்லை.
            படம் பார்க்கத்தானே டூவீலரில் வருகிறார்கள். தியேட்டரில் வந்து பார்க்கிங் பண்ணவா வருகிறார்கள். அதற்கு ஏன் கட்டணம் வசூலிக்கிறார்கள்? டூவீலருக்குப் பத்து ரூபாய் என்றால் கார் வைத்திருப்பவர் நிலைமை மோசம். முப்பது ரூபாய்.
            டாய்லெட்டுகளைப் படுமோசமாக வைத்திருக்கிறார்கள், படம் பார்க்க வந்ததற்கு தண்டனை என்பதைப் போல. ஒரு வழியாக முடித்துக் கொண்டு போய் உள்ளே அமர்ந்தால் அசுத்தம் செய்யாதீர்கள் என்று ஸ்லைட் போடுகிறார்கள். சமயங்களில் தூய்மை இந்தியா விளம்பரத்தையும் போடுகிறார்கள். ரொம்ப மனசாட்சி உள்ளவர்கள் போலும்.
            இவ்வளவையும் சொன்ன பிறகு எதற்கு இதெல்லாம் என்று திரைப்படங்கள் பற்றி எழுதச் சொன்ன நண்பர் கேட்டார்.
            பிறகு என்னதான் எதிர்பார்க்கிறீர்கள் என்றதற்கு காலா படம் பற்றிச் சொல்லுங்கள் என்றார்.
            ஓர் இயக்குநர் நடிகர்களை நன்றாக இயக்கியிருக்கிறார் என்றதற்கு இது என்ன விமர்சனம் என்றார்.
            நாம் நடிகர்களை இயக்கச் சொல்லியல்லவா பிராது கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றதற்கு நண்பர் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டார்.
            இனிமேல் சினிமா பற்றி எதுவும் பேச மாட்டேன் என்பது போலிருந்தார் அவர்.
*****

2 comments:

  1. ஓர் இயக்குநர் நடிகர்களை நன்றாக இயக்கியிருக்கிறார் .....
    அருமை ஐயா!..

    இயக்குநர் தான் படத்தைத் தீர்மானிக்ககிறார்கள்...

    எனது கல்வி நூல் வரிசை புத்தகங்களில் கரும்பலகைக்கு அப்பால் புத்தகம் பற்றி எழுதியதில் இது பற்றி எழுதி இருந்தேன் ..

    அருமை ஐயா!.

    ReplyDelete
    Replies
    1. நமது மக்கள்தான் அப்படித்தான் இருக்கிறார்கள். எப்போதும் ஒரு திரைப்பட பிம்பம் தங்களை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். திரைப்பட பிம்பங்கள் இயக்கப்படுபவர்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு மாபெரும் தயக்கம் இருக்கிறது. அவர்களுக்கான சிறந்த ஒரு பொழுதுபோக்கை உருவாக்கி விட்டால் எவரும் அவர்களை இயக்குபவர்களாக மாறி விட முடிகிறது. அவர்களுக்குப் பொழுதுபோக்காகச் சிந்திப்பதே வசதியாக இருக்கிறது. அதைத் தாண்டிச் சிந்திப்பது அசதியாக இருக்கிறது.

      Delete

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...