தர்ம யுத்தங்களின் கதை
தொடரும்
தர்ம யுத்தத்திற்கு
பணமே
தலைவன்
ஒரு
பக்கம் சாய்வதையும்
எதிர்த்து
நிற்பதையும்
தலைவனே
தீர்மானிக்கிறான்
பண
மாற்ற மதிப்பில்
தர்ம
யுத்தங்கள் தடமாறலாம்
அணிகள்
திசை மாறலாம்
பணமும்
பதவிகளும் இருக்கும் வரை
தர்ம
யுத்தங்கள் நிகழ்வதை
தடுக்க
முடியாது
இதுவரை
பூமியில் நடந்த
தர்ம
யுத்தங்களின் கதைகளோ
இனிமேல்
நடக்கப் போகும்
தர்ம
யுத்தங்களின் கதைகளோ
மாறப்
போவதில்லை
மனிதர்கள்
மட்டுமே மாறப் போகிறார்கள்
என்பது
தெரிந்த பின்
தன்
கக்கத்தில் செருகிய சங்கை எடுத்து
அருங்காட்சியகத்தில்
வைக்கட்டும்
கிருஷ்ண
பரமாத்மா.
*****
No comments:
Post a Comment