3 Jun 2018

குறிப்புப் புத்தகங்களின் எழுத்துகள்

குறிப்புப் புத்தகங்களின் எழுத்துகள்
குறிப்புப் புத்தகத்தில்
முப்பது எழுத்துகள் தகுதி நீக்கம்
செய்யப்பட்டு இருக்கின்றன
இனி குறிப்புப் புத்தகத்தை வாசிப்பது
எளிதாக இருக்கும்
தகுதியிழந்த குறிப்பு எழுத்துகள்
மேல் முறையீடு செய்யக்கூடும்
புதிய குறிப்புகள் எழுதப்பட்டு
குறிப்புப் புத்தகம்
பழையபடி ஆக்கப்படுவதும்
தகுதியிழப்பு அப்படியே ஆகுக என
உரைக்கப்படுவதும் என எதுவும் நிகழலாம்
குறிப்புப் புத்தகத்தை வைத்துக் கொண்டே
நீக்கியும், சேர்த்தும், திருத்தியும்
இப்படியே காலத்தை ஓட்டி விடலாம்
குறிப்புப் புத்தகங்கள் நிச்சயமற்ற நிலையில்
நிச்சயம் தரும் சாசுவதமானவை
*****

2 comments:

  1. சமகால தமிழக சட்டசபை அரசியல் பதிவா ஐயா இது!!! புரிந்தது எனக்கு!

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பு என்பது படைப்பையும் மிஞ்சக் கூடியது அல்லவா! மிஞ்சி விட்டீர்கள் ஐயா!

      Delete

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...