2 Jun 2018

குழப்புவதற்கு வசதியான மனம்


குழப்புவதற்கு வசதியான மனம்
            மனம் பிரச்சனையாக இருக்கிறது. அதைத்தான் பிரச்சனையாக கூற வேண்டியிருக்கிறது. அதை விரிவாக்கி சுற்றமும் பிரச்சனைக்குரியதாக இருப்பதாகக் கூற வேண்டியிருக்கிறது.
            தாக்குவதற்கு மிகவும் பலஹீனமான ஒன்று மனம்தான். குழப்புவதற்கும் அதுதான் வசதியானது.
            அநேகமாக உதவி செய்கிறேன் என்று வருபவர்கள் மிகத் தெளிவாகக் குழப்புவர்களே.
            சிறு சிறு வேலைகளைச் செய்யத் துவங்கி விட்டால் உற்சாகம் ஏற்படத் துவங்கி விடுகிறது. ஆக அவசியத் தேவை சிறு சிறு வேலைகளைத் துவங்குவதுதான்.
            ஏதாவது செய்! துரு பிடித்து இத்துப் போகும் இரும்பை விட, பயன்படுத்தித் தேயும் இரும்பு பன்மடங்கு மேலானது என்பதனால் அல்ல, மனத்தின் வெற்றுப் பிரச்சனைகள் உம்மைத் தின்னாமல் இருப்பதற்காக!
*****
சரியா? தவறா?
            1. மனிதர்கள் வேட்டையாடி, சண்டையிட்டு தம் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். பிறகு அவர்களது வன்மத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகவே குடும்பததை உருவாக்கிக் கொண்டார்கள்.
            2. உங்கள் செல்வம் உங்களைச் சார்ந்திருப்பவர்களைச் சுதந்திரமற்றவர்களாய்ச் செய்து விடுகிறது.
            3. எதையும் அதன் போக்கில் முயல வேண்டும். அது அற்புதமான முறை. எதிர்பார்க்காத கருத்துகள் பல வந்து குதிக்கும். படைப்பாற்றலை அறியாத தளத்திலிருந்து எடுக்க அது ஓர் அருமையான முயற்சி.
            4. பேசும் போது இரண்டு பக்கமும் பேச வேண்டும். மனதின் சமநிலை அப்போதுதான் உருவாகும். முடிவும் இரண்டு பக்கமுமே நன்மையானது என்று முடிக்க வேண்டும்.
            5. குறிப்பாக ஒருவருக்கு ஆறுதல் சொல்வது என்பது சவாலானது. அவர்கள் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டு இருப்பார்கள். இது ஆறுதல் சொல்பவர்க்குக் கோபத்தை வரவழைத்து விடும். மேலும் ஒருவரின் புரிதல் ஆழமானது. அவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவந்து விட மாட்டார்கள். மேலும் அவர்கள் தங்களின் புரிதலுக்கு ஏற்ப உங்களையும் மாற்ற பார்ப்பார்கள். அவர்களின் பதிலுக்கு நீங்கள் வரவில்லையெனில் உங்களையும் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். அல்லது உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எரிந்து விழுவார்கள். அல்லது உங்களிடம் பேச மாட்டார்கள்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...