1 Jun 2018

பேச்சுக் கலை மர்மங்கள்


பேச்சுக் கலை மர்மங்கள்
            வார்த்தைகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துபவர்கள் வறட்சிக் காலத்தில் வார்த்தைப் பஞ்சத்தால் அவதிப்படுவதில்லை. வார்த்தைகளை ஊதாரித் தனமாகப் பயன்படுத்துபவர்கள் அப்படிப் பயன்படுத்தியதாலே வெள்ளம் கரை புரண்டோடும் காலத்திலும் குடிக்க தண்ணீர் இல்லாமல் வார்த்தைத் தாகத்தால் அவதிப்படுகிறார்கள்.
            சொல்லாத ஒரு வார்த்தையைக் கொண்டு வருங்காலத்தில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அதையும் வருங்காலத்தில் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. சொல்லி விட்ட வார்த்தை ஆபத்தானது. எல்லா பிரச்சனைகளையும் உருவாக்கியது அந்த வார்த்தையாகத்தான் இருக்கும்.
            மிகவும் நேர்மறையாகப் பேசுவது நல்லது என்பதற்காகத்தான். அதே நேரத்தில் இரண்டு பக்கங்கள் உருவாகும் போது இரண்டு பக்கமும் பேலன்ஸ்டாகப் பேசுவது மிகவும் நல்லது. அடித்துக் கொள்ளும் இருவரும் எந்த நேரத்திலும் நண்பர்களாவார்கள்.
            எல்லாவற்றிலும் மழுப்பினாற் போல் பேசும் போதும், இப்படியா? அப்படியா? என குழம்பினாற் போல் பேசும் போதும் அதற்காகக் களைத்துப் போக வேண்டியதில்லை, நாம் யாரிடம் பேசிக் கொண்டு இருக்கிறோமோ அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதன் அடையாளம் அது. கோடைக் காலத்தில் மழைக்கு ஆதரவாகவும், மழைக் காலத்தில் கோடைக் காலத்துக்கு ஆதரவாகவும் பேசும் மனிதர்கள் மத்தியில்தான் நாம் இருக்கிறோம்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...