16 Jun 2018

ரவுடித் தலைவர்கள்


ரவுடித் தலைவர்கள்
            நல்ல தலைவர்கள் பிறந்து நாட்டைக் காப்பாற்றிய நிலை மாறி ரவுடிகள் தோன்றித்தான் நாட்டைக் காக்க வேண்டியிருக்கிறது.
            எங்கே இந்த நிலை கேட்காதீர்கள்!
            இங்கேயும் கூட இருக்கலாம்!
            அப்படி எந்த ரவுடி நாட்டைக் காப்பாற்றி விட்டார் என்று கேட்காதீர்கள்!
            திரைப்படங்களில் அப்படித்தானே காட்டுகிறார்கள்!
            திரைப்படத்தில் காட்டி விட்டால் அது சரியாகி விடுமா என்று கேட்காதீர்கள்!
            சமூகத்தில் நடப்பதைத்தான் திரைப்படம் பிரதிபலிப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள்!
            போராடினால் நாடு சுடுகாடாகி விடும் என்று அச்சுறுத்தப்பட்ட நிலையில் ஏதோ ரவுடிகளாவது தோன்றி நாட்டை நல்லவிதமாகக் காக்கட்டும்.
            நிலைமையைப் பார்க்கையில் இந்த நாட்டில் ரவுடிகள் தலைவர்களாகிறார்கள் அல்லது தலைவர்கள் ரவுடிகளாகிறார்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...