13 Jun 2018

ஏதோ வாசிக்கப்படுகிறது என்பதாக!

ஏதோ வாசிக்கப்படுகிறது என்பதாக!
சொன்னால் நம்ப மாட்டீர்கள்
நீங்கள் உங்கள் முட்டாள்தனங்களைத்
தொலைப்பதற்காகப் படிக்கிறீர்கள்
நீங்கள் அதிகம் படிப்பதாக
பொதுவாக ஒரு புகார் இருக்கிறது
யாரையும் முட்டாளாகச் சொல்ல
அவ்வளவு எளிதில் முடியாது என்பதால்
மற்றவர்கள் படிப்பது குறித்து
பெரிய அக்கறை எதுவும் உங்களுக்கு இல்லை
சொன்னால் கோபப்படுவீர்கள்
படித்த பின்னும் நீங்கள்
மறுபடியும் ஒரு முட்டாளாக இருக்கிறீர்கள்
நீங்கள் வாசிக்கும் புத்தகத்திற்கு
மிக நன்றாகத் தெரியும்
எப்படி ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்பது
உங்களுக்குத் தெரியாது என்பது
பொய் சொல்வதாகச் சொல்வீர்கள்
வாசிக்கப்பட்ட புத்தகத்திற்கு ஏற்ப
புரட்சிகள் இல்லாத போது
புத்தகம் வாசித்தீர்கள் என்பதை
எப்படி நம்புவது என்பதை நீங்களே சொல்லுங்கள்!
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...