12 Jun 2018

அழுத கண்ணீர் ஓடி வறண்டு கிடக்கும் நதி!

அழுத கண்ணீர் ஓடி வறண்டு கிடக்கும் நதி!
வறண்டு கிடக்கும் நதி குறித்து
எந்தக் கவலையும் இல்லாது
புனித நீராடலுக்காக
நீர் கொண்டு வரப்படுகிறது
கால்வாய் மதகுகள் அனைத்தும்
அடைக்கப்பட்ட கதவுகளிலிருந்து
முலைப்பால் போல்
கொஞ்சம் நீர் கசிகிறது
பறந்து வந்த கொக்குகள்
செய்தி கேள்விப்பட்டு
பாதி வழியிலேயே திரும்புகின்றன
முன்னத்தி ஏர்கள் செல்லரித்து
மியூசியத்தின் மூலையில் சிதைந்து கிடக்கின்றன
நினைப்பவர்கள் நினைத்தால்
காவிரியை நீரோடும் நதியாக்கவும்
மணலுக்காகவும்,மீத்தேனுக்காகவும்
பாலையாக்கவும் முடியும்
நாமென்ன செய்ய
அழுத கண்ணீர் ஓடியும்
வறண்டு கிடக்கும் காவிரி!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...