29 May 2018

அதிசய உலகம்


அதிசய உலகம்
            எஸ்.கே. தனக்கானப் பிரத்யேகக் குறிப்பேட்டில் பின்வரும் ஐந்து குறிப்புகளை எழுதி அதற்கு அதிசய எழுத்து என்று தலைப்பிட்டார். பின்னர் நினைத்தாரோ தலைப்பை அதிசய உலகம் என்று மாற்றிக் கொண்டார். இக்குறிப்புகள் இரண்டு தலை மனிதர், ஐந்து கால் ஆட்டுக்குட்டி, பத்து கண் புலி என்பது குறித்து இல்லாவிட்டாலும் எஸ்.கே. இறுதியாக இட்ட தலைப்பு அதுதான். அந்தக் குறிப்புகள் இவைகள்.
            1. உலகம் ஏற்கனவே தப்பும் தவறுமாகத்தான் இருக்கிறது என்றால் மேலும் தப்பும் தவறுமான விளக்கத்தை அளித்து விட வேண்டாம். அது ஏற்கனவே சரியாகத்தான் இருக்கிறது என்றால் தயவுசெய்து எந்த விளக்கத்தையும் அளித்து விட வேண்டாம்.
            2. எல்லாவற்றையும் செய்தால் எதிலாவது குற்றம் காணப்படும். எதையும் செய்யா விட்டால் எதையாவது எப்படியாவது செய்ய வைப்பது குறித்து ஆராயப்படும்.
            3. நிறைந்துள்ள பணப்பையை விட நிறைவான மனமே சிறந்தது என்று ஓரிடத்தில் படித்ததாக ஞாபகம். மனம் ஒரு போதும் நிறையாத ஒட்டைப் பை என்பது தெரியுமா?
            4. உங்களிடமிருந்து எழுவதுதான் உங்களுக்கான எழுத்து. அந்த எழுத்துகள் உங்கள் ஆசிரியரிடமிருந்து கற்றதுதான். அர்த்தங்கள் உங்களிடமிருந்து புறப்படுபவை.
            5. கொஞ்சம் குறைகளோடு ஏற்றுக் கொண்டால் எந்தக் குறைகளுமில்லை.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...