30 May 2018

மூன்று தெறிப்புகள்


மூன்று தெறிப்புகள்
            1. எழுத்தின் அழகு எழுதுகின்ற கையின் பொறுமையில்தான் இருக்கிறது.
            2. சோம்பேறித்தனத்தை எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை. எவரும் எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்க முடியாது. ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஒன்றில் எவரும் சுறுசுறுப்பாகச் செயலாற்றுவர். சோம்பேறித்தனம் இருக்கும் ஒருவர் சுறுசுறுப்போடும் இணைந்தே இருக்கிறார். ஒருவரைப் பற்றி அறிந்த பக்கங்களின் அடிப்படையில் ஒருவர் சோம்பேறியாகத் தெரியலாம். அறியாத பக்கங்களின் அடிப்படையில் அவர் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
            3. எல்லையற்ற அன்புதான் எல்லாமும் என்பது. அது அடையாளமற்றே இருக்கிறது. அப்படியானால் அடையாளத்தோடு இருப்பதைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லை.
*****
அது அப்படியா என்ன?
            ஆசையாகக் கேட்கிறார்கள் என்பதற்காக செய்யப்படுவது அன்பை அதிகப்படுத்தும் என நம்பப்படுகிறது. அது உண்மையிலேயே அப்படியா என்ன?
            அங்கிருந்துதான் பிரச்சனைகள் துவங்குகின்றன என்பதை அனுபவப்பட்டவர்கள்தான் உணர முடியும். உண்மையில் அன்பாக இருப்பவர்கள் ஆசைப்பட்டு எதையும் கேட்பதில்லை. அவர்கள் அன்பானவர்களின் அருகாமையை மட்டுமே விரும்புகிறார்கள். தாம் ஆசைப்பட்டதைக் கொண்டு தருவதற்காக அன்பானவர்கள் பிரிவதை விரும்புவதில்லை.
            ஆசையாகக் கேட்கிறார்கள் என்றால் முதலில் உடன்பாடாகச் சிந்திப்பதைப் போல, இரண்டாவதாக எதிர்மறையாகவும் சிந்தித்தால் சரியான கோணத்தை அடைய முடியும். அது அனுபவத்திற்கு முன் சாத்தியமா என்பது தெரியவில்லை. வேண்டுமானால் முயன்று பார்க்கலாம்.
            ஆசைப்பட்டவர்களுக்காக செய்ததற்குப் பின்பான வாழ்க்கை என்பது துயரமான வாழ்க்தைான். அதில் சிரித்த நாட்களை விட, சோகமான நாட்கள் அதிகமாக இருக்கும். சிக்கிக் கொண்ட பின் முட்டாள்தனமாக சிக்கிக் கொண்ட நரகம் அது என்பதை உணர முடியும்.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...