ஒரு வகை பேச்சு வார்த்தை
ஞாயிற்றுக்
கிழமையில்
வேலை
நிறுத்தம் செய்வதாகச் சொன்ன
குளியலறையும்
கழிவறையும்
கதவடைத்துக்
கொண்டன
காபி
உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறது
இரண்டு
இட்டிலியும் கொஞ்சம் சட்டினியும்
ஆர்ப்ப்பாட்டம்
செய்வதாகக் கேள்வி
மதிய
உணவு கண்டன முழக்கம் எழுப்புகிறது
சிற்றுண்டி
வகையறாக்கள் பேரணியில்
இனி
இவைகளோடு பேச்சு வார்தை
தொடங்க
வேண்டும்
பேசாமல்
பேசாமலே இருந்து விட்டால் என்ன
ஞாயிற்றுக்
கிழமைகள் உறங்குவதற்கானவை
என்பது
புரியாத போராட்டக்காரர்கள்
ஏமாந்துப்
போகட்டும்
*****
No comments:
Post a Comment