எஸ்.கே.யிடம் கேள்விகள்
அன்று எஸ்.கே.யிடம் கேட்கப்பட்ட எல்லா
கேள்விகளுக்கும் அவர் ஒரே வார்த்தையில் பதில் தந்தார்,
உங்கள் எல்லா கேள்விகளுக்கும் என் ஒரே
பதில் 'அச்சம்' என்று.
அதைத் தொடர்ந்து எஸ்.கே. சொன்னார்,
உங்கள் அச்சம் அகன்ற பின் அங்கே எந்த கேள்வியும்
மிச்சம் இருக்காது என்று.
*****
எஸ்.கே. தம் கடை முன் வைத்த பதாகை
எஸ்.கே. தம் கடையைத் திறந்து பல ஆண்டுகள்
ஆகின்றன. தம் கடைக்கு ஒரு விளம்பரப் பலகைக் கூட இல்லாமல்தான் அவர் தம் கடையை அமைத்திருந்தார்.
அன்று அவர் தம் கடை முன் இப்படி ஒரு பதாகையைப் பெரிய அளவில் வைத்திருந்தார். அப்பதாகையில்
இருந்து என்னவோ அதுதான் கீழே இருப்பது...
இனி எஸ்.கே.வாகிய என்னால் எவருடைய எதிர்பார்ப்பிற்குமானப்
பண்டங்களைத் தயாரிக்க முடியாது. எஸ்.கே.வாகிய எனக்குத் தயாரிக்கத் தோன்றுகின்ற பண்டம்
எதுவோ அதுவே என் தயாரிப்பு. அதற்கு மேல் எஸ்.கே.வாகிய என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விட்டன.
*****
தன்னிலை விளக்கமா ஐயா!
ReplyDeleteஅது அப்படித் தோன்றலாம். ஆனால் அப்படியில்லை ஐயா!
Deleteபறவை ஏன் பாடுகிறது? பாடாமல் இருக்கிறது?
பாடத் தோன்றினால் பாடும், அல்லது பாடாமல் இருந்து விடும்.
அதற்கான விளக்கங்களைக் கேட்பவர்கள் சொல்லலாம். சரியான விளக்கங்களும் இருக்கலாம்.
பறவைக்கு அந்த விளக்கங்கள் தெரியுமோ? தெரியாதோ?
பறவைப் போலாகி விட்ட எஸ்.கே. ஒன்று பதாகையை வைக்கிறார், அல்லது வைக்காமல் இருக்கிறார்.
அதற்கான விளக்கங்கள் எதுவுமில்லை.
விளக்குவதற்கான சூத்திரங்கள், செய்யுள்கள் எதுவும் எஸ்.கே.விடம் இருப்பதாகத் தெரியவில்லை.
எஸ்.கே.விடம் இருப்பதெல்லாம் விளக்குவதற்குத் தேவையில்லாத எளிமையான வார்த்தைகள்.
இப்படிச் சொல்வதால் இதை எஸ்.கே.வின் ஒரு விளக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
விளங்கிட எதுவும் இல்லை எனும் போது விளக்கங்கள் எதுவுமில்லை.
அது வெளிப்படுகிறது அல்லது வெளிப்படாமல் இருந்து விடுகிறது.
*****