குழந்தைகள் சந்தைச் சரக்குகள்!
குழந்தைகளைச் சாதனையாளர்களாக ஆக்க நினைப்பவர்கள்
இருக்கிறார்கள். குழந்தைகள் இயல்பிலேயே சாதனையாளர்கள்தான். அவர்களுக்கே உரிய தனித்தன்மையில்
அவர்கள் சாதனையாளராக இருப்பார்கள். அவர்களுக்கே உரிய தனித்தன்மையில் அவர்கள் சாதனையாளராக
இருப்பதை சாதனை என்று அங்கீகரிப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
அவர்களை அவர்களின் தனித்தன்மையில் விட்டால்
சர்வ சாதாரணமாக சாதனையாளராகி விடுவார்கள். சர்வ சாதாரணமாக நடக்க வேண்டிய நிகழ்வு அது.
சாதாரணமாக இருப்பதை அசாதாரணமாக மாற்ற நினைப்பது மனித இயல்பு. அப்படித்தான் குழந்தைகளின்
சாதனைத்தன்மை அசாதாரணப்படுத்தப்படுகிறது. அவர்களின் தனித்தன்மையை மாற்ற நினைத்தால்
அவர்களின் சாதனைத்தன்மை தாமதப்படும்.
தனித்தன்மை மாற்றப்பட்ட குழந்தைகளில் தாங்கள்
(ஏ)மாற்றப்பட்டதைப் புரிந்து கொண்டு சாதித்தவர்களும் இருக்கிறார்கள், அதைப் புரிந்து
கொள்ள முடியாமல் சிதிலமானவர்களும் இருக்கிறார்கள்.
இயற்கையில் எல்லாம் மலரவே பிறக்கின்றன.
சில நேரங்களிலோ, பல நேரங்களிலோ அவைகள் மலர்வதும், மலர முடியாமல் போவதும் தோட்டக்காரர்களின்
கையில் போய் விடுவதும், மலர்கள் வியாபாரமாகி பணமாவதும் தவிர்க்க முடியாதவைகளாகி விடுகின்றன.
நடப்பதைப் பார்க்கும் போது,
இங்கு நடப்பது சாதனை வியாபாரமேயன்றி வேறென்ன?
துட்டுகள், பாராட்டுகள், புகழ்ச்சிகள்
இவைகளுக்கானச் சந்தைச் சரக்குகளேயன்றி குழந்தைகள் வேறென்ன?
*****
No comments:
Post a Comment