9 Apr 2018

கொஞ்சம் மன்னிப்பு இருந்தால் தாருங்கள்


கொஞ்சம் மன்னிப்பு இருந்தால் தாருங்கள்
எல்லாரிடமும் மன்றாடிப் பார்த்தேன்
ஒவ்வொரு இடமாய்த் தேடிப் பார்த்தேன்
கொஞ்சம் மன்னிப்பு இருந்தால் தாருங்கள் என்று
கால் பிடித்து இறைஞ்சினேன்
யாராலும் வழங்க முடியாத அளவுக்கு
மன்னிப்பு மிக உயர்ந்த இடத்தில் இருந்தது
அதன் பிறகான நாட்களில்
என்னை நானே தண்டிப்பதை
நிறுத்திக் கொண்டேன்
என்னை நானே மன்னித்துக் கொண்டேன்
மன்னிப்பு எனக்குத் தேவையில்லாமல் போனது
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...