13 Apr 2018

உருவிய சைலன்ஸலிருந்து வெளிப்படும் வார்த்தைகள்

உருவிய சைலன்ஸலிருந்து வெளிப்படும் வார்த்தைகள்
விஷமான ஒரு வார்த்தை
பாம்பைப் போல் தீண்ட
அவர் இறந்து கொண்டிருப்பது அறியாமல்
அதை ஒரு கேலியாக எண்ணி
எல்லாரும் ரசித்துச் சிரிக்க ஆரம்பித்தார்கள்
சாவுக்கு முன் சிரிப்பு
‍செத்த பின் அழுகை என தேற்றிக் கொண்டார் அவர்
மறுநாள் அவர் உயிர் மீண்டு வருவாரோ
என்பது குறித்த பயபதற்றம் யாருக்கும்
இருப்பதாக தெரியவில்லை
வெட்கம் அறுந்துப் போனால்தான்
சமூகத்தில் வாழ முடியும் என்பதில்
தெளிவாக இருப்பவர்கள் எத்தனை பேரோ என
குழந்தையைப் போல அழ ஆரம்பித்து
கிழவனைப் போல சிரிக்க ஆரம்பித்தவர்
அப்படிச் சாதாரணமாக சொல்லத்தான் முடியுமா?
செத்துப் பிழைத்து வெட்கம் அறுந்து போனவர்கள்
இருக்க மாட்டார்களா என்ன?
விரையும் வாகனத்திலிருந்து உரக்கக் கத்தியபடி
சென்று கொண்டிருந்தார்
எச்சரிக்கையாக முன்கூட்டி
சைலன்ஸரை உருவியிருந்த அவர்
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...