11 Apr 2018

வன தேவதை


வன தேவதை
கானகமெங்கும் தேடிப் பார்த்த
கன்னிப் புரிந்து கொள்கிறாள்
காதலன் சுடப்பட்டு இருப்பதை
செம்மரங்களைத் தடவிப் பார்க்கிறாள்
இம்மரங்கள் இங்கு வந்து
ஏன் முளை கொண்டன என்று
ஆத்திரம் கொள்கிறாள்
ஆத்திரம் கொள்வதில் பயனேது?
நான்கு செம்மரங்களை வெட்டி விற்றால்
ஒரு துப்பாக்கி வாங்க முடியுமா என்று யோசிக்கிறாள்
காட்டிற்கான வன தேவதை
உருவாகி விட்டாள் என
இலைகள் தட்டி ஆர்ப்பரிக்கின்றன மரங்கள்
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...