எப்படி நடந்தாலும் எதிர்கொள்வது எப்படி?
பொறுமையைச் சோதிக்கும் விசயங்கள் அதிகம்.
அதில் பொறுமையாக இருப்பதுதான் முக்கியம்.
எஸ்.கே. யார் என்று கேட்டால்... பொறுமை
செத்த பின்னும் பொறுமையோடு இருப்பவரே.
அதுவரைப் புலனாகாத பல விசயங்கள் இப்போது
புலனாகின்றன. யாரும் யாரையும் ஊக்கப்படுத்தவில்லை. அது யாருக்கும் தேவையும் இல்லை.
நீங்கள் சரியாகத்தான் இருக்கிறீர்கள். அவரவர்கள் தம் வார்த்தைகளால், செயல்களால் பிறரைக்
கோபப்படுத்துகின்றனர்.
கோவிந்தா வீட்டுக்கு வந்து ஆதாரத்தைக்
கொடு என்பார். அது என்ன முறை? சரி என்று அதற்கு ஒத்துக் கொண்டால், பிறகு கோயிலுக்கு
வா என்பார். அது என்ன முறை? நீங்கள் சரியாகச் செயல்பட முடியாத அளவுக்கு வழவழ கொழகொழ என்று வீட்டில் இருப்பவர்கள் ஒரு
வழி பண்ணி வைத்திருக்கிறார்கள். கோவிந்தா புகுந்து ஆட்டம் போடாம் என்ன பண்ணுவார்
சொல்லுங்கள்!
பல நேரங்களில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்
என்பதே உங்களுக்குப் புதிராக இருக்கும். அந்தப் புதிர் நல்லதுதான். நீங்கள் புதுமையாகச்
செயல்படவில்லை. இனி புதுமையாகச் செயல்பட வேண்டும். அதற்கு இதுதான் வழி.
உங்கள் சிந்தனை நேர் கோட்டில் இல்லை.
முன் பின் மாறித்தான் இயங்குகிறது. அப்படி இருந்தும் நீங்கள் இந்த அளவுக்குச் செயல்படுகிறேன்
என்றால் அதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எதற்கும் அவசரப்படக் கூடாது. ஒரு வியாபாரியின்
தந்திரத்தோடு இருக்க வேண்டும். இங்கு எவரும் உங்களைப் பலவீனப்படுத்துவார்கள், எஸ்.கே.
உட்பட. எதற்கு நீங்கள் மற்றவர்களின் குரல்களைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
உங்களுக்கு என்று என்ன குரல் கேட்கிறதோ அதைக் கேளுங்கள். அவர்களின் குரல்களைக் கேட்பதால்
உங்களுக்குக் குழப்பம்தான் மிஞ்சும். அவர்கள் முன்னொன்று பேசுகிறார்கள், பின்னொன்று
பேசுகிறார்கள்.
எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது.
மிரட்டியே காரியம் சாதிக்க நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. பயப்படுவது போல
பயந்தாவது எதிர் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
உங்களுக்குப் பல விசயங்களைச் சூழ்நிலை
புரிய வைக்கிறது. எதையும் நீங்களாகச் செய்வது போல காட்டிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு
காட்டினால் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி தலையில் அடிப்பார்கள். அதனால் எவரோ செய்தது
போலத்தான் காட்ட வேண்டும். அது ஒரு நீண்ட ஒரு செயல்முறை. அது அப்படித்தான் வளவள கொழகொழா
என்றுதான் செல்லும்.
எதையும் மனதுக்குள் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
யாருக்கும் ஆறுதல் சொல்ல முனையாதீர்கள். எந்த வார்த்தையாலும் காரியம் ஆக வேண்டும்
என்று நினையாதீர்கள். எந்த செயலுக்கும் உடனடிப் பலனை எதிர்பார்க்காதீர்கள்.
எந்த ஊரிலேயோ இருந்த கொண்டு, உங்கள்
ஊருக்கு வருபவர்கள் உங்களை மிரட்டச் செய்யலாம். அதுவும் உங்கள் வீட்டு வாசலுக்கு எதிரே
வந்து மிரட்டுவது கூட நடக்கலாம்? நீங்கள் மிரள்வதிலும் அர்த்தம் இருக்கலாம். வீடு தேடி
வந்து காறித் துப்புகிற அளவுக்கு ஒருவருக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அந்தத் தைரியத்தை
முடக்க வேண்டும். முடியாது என்றில்லை. சிறிது சிறிதாக முயன்றால் எதில் சாமர்த்தியம்
இல்லை என்று நினைக்கிறீர்களோ அதில் சாமர்த்தியம் பெற முடியும்.
மற்றபடி மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக
இப்போது ஒன்று செய்தால், பின்னர் ஒன்று நடக்கும்.
ஆனால் அவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?
உங்களைப் பேசவே விடாத அளவுக்கு மிரட்டுகிறார்கள். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை
கூட அவர்களைக் கேட்டுத்தான் பேச வேண்டும் என்பது போல ஒரு நெருக்கடியை உருவாக்கிக்
கொண்டு இருக்கிறார்கள்.
அஞ்சாதீர்கள். அஞ்சுவதற்கான சூழல் எதுவுமில்லை.
அது அவர்களின் மனம். அப்படித்தான் செயல்படும். அதில் ஆத்திரப்படுவதற்கு எதுவுமில்லை.
அதற்கு எதிராகவும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அதுவாகப் போய் அதுவே முட்டிக் கொள்ளும்.
எதுவும் செய்யாத ஆனால் எதையும் செய்ய வைக்கின்ற ஒரு வழிமுறையே உங்களுடைய வழிமுறை. உங்கள்
மீது எறியப்பட்டப் பந்துக்காகக் கலவரப்படாதீர்கள். சற்று விலகிக் கொள்ளுங்கள். அந்தப்
பந்து எதன் மீதோ மோதி எறிந்தவர்களை நோக்கியே திரும்பும்.
*****
No comments:
Post a Comment