8 Apr 2018

யானையை யானையாகப் பார்ப்பதின் பிரச்சனைகள்


யானையை யானையாகப் பார்ப்பதின் பிரச்சனைகள்
நான்கு குருடர்கள் பார்த்த பிறகு
தன் உருவப் பிரக்ஞையின்றி
புறப்பட்டது யானை
கதை கேட்ட குழந்தை
முறம் என்றால்
குதிர் என்றால்
தூண் என்றால்
உலக்கை என்றால்
என்னவென்று புரியாமல்
கேட்டுக் கொண்டிருந்தது
யானையை யானையாகவே
பார்த்திருக்கலாம் அவர்கள் என்று
முறுவலித்துக் கொண்டது
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...