8 Apr 2018

சொற்களில் ஒளிந்திருக்கும் சூட்சமங்கள்


சொற்களில் ஒளிந்திருக்கும் சூட்சமங்கள்
            உங்களுக்கு வரும் கோபம் எல்லாம் எதையும் சாதிக்க முடியவில்லையே என்பதால் வரும் கோபமே. ஏன் சாதிக்க வேண்டும்? நீங்கள் பாட்டுக்கு உங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டிருங்கள். சரியான நேரம் வந்தால் சாதிக்கப்படுபவைகள் சாதிக்கப்படுவது நிகழ்ந்து கொண்டிருக்கும். ரொம்ப பேசிப் பிரயோஜனம் இல்லை. செயல்பாடுகள் இருந்தால்தான் எதுவும் அர்த்தப்படும். பேச்சு பொறுமையின்மையைத்தான் வளர்க்கிறது. கோபத்தைத்தான் பெருக்குகிறது. ஆனால் பொறுமையால்தான் சாதிக்க முடிகிறது.
            ஒரு சுடுசொல் கூட பேசாமல் இருப்பதன் பிராபிட் உங்களை வந்து அடைந்தே தீரும்.
            அன்றைக்கு எம்.கே. என்ன செய்தார்? எஸ்.கே. எழுதிய அட்டைகளைக் கிழித்துப் போட்டார். எஸ்.கே. எதுவும் சொல்லவில்லை. அதனால் அவருக்கு எதுவும் இல்லை. எப்போதும் போல் அவரால் பேச முடிந்தது. எம்.கே.தான் அதன் பிறகு எஸ்.கே.விடம் பேச தடுமாறிப் போனார். சம்பவங்கள் அப்படித்தான் அமையும்.
            உயர்ந்த ஞானிகள் இந்தப் போக்கைத்தான் கையாள்கின்றனர். அவர்களின் சொற்களில் சுடுசொற்கள் இருப்பதில்லை. ஒரு மெல்லிய கேலி, கிண்டலுடன் நிறுத்திக் கொள்வார்கள். அதுவும் நேரடியாக உறுத்தாமல், மறைமுகமாக மனதைத் தாக்கும் வகையில்.
            ஒரு சிலர் விசயத்தில் முயற்சியின்மை, பொறுமையின்மை ஆகிய விசயங்களையே கண்டிக்கலாம். சற்று கடுமையாகக் கூட கண்டிக்கலாம். அதுவும் வார்த்தைகளால்தான் என்றாலும் அது தேவையில்லை. எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ஒருவர் இருந்தால்தான் சொல்வது செல்லுபடியாகும், செய்வதால் பலன் உண்டாகும்.
            ஒரு முட்டாள்தனமான மனநிலையில் இருப்பவரிடம் போய் அறிவார்ந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்க முடியாது. அவர் தான் விரும்பும் முட்டாள்தனமான வாதங்களையே விரும்புவார். மனித மனதின் மென்மையான சூட்சமம் இது.
            நீங்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காக யாரையும் காயப்படுத்த வேண்டாம். உங்கள் விருப்பங்களும், முயற்சிகளும் சாதனைகளை நிறைவேற்றியே தீரும். அதில் அவசரம் காட்ட வேண்டாம்.
            யாரையும் நிர்பந்தபடுத்த வேண்டாம். நிர்பந்தம் செய்வதால் கோபம்தான் உண்டாகும். நிர்பந்தம் செய்கிறார்களே என்ற கோபம் மற்றும் நிர்பந்தம் செய்தும் நிகழ்த்த மாட்டேன்கிறார்களே என்ற கோபம் ஆகிய இரு வகைகளில் கோபம் கொப்புளிக்கக் கொப்புளிக்க ஏற்படும்.
            யாரும் எதைச் சொல்லியும் கேட்கப் போவதில்லை என்பதால் அவர்கள் செய்ய வேண்டியதைச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. எதையாவது அபத்தமாகக் கூட சொல்லிக் கொண்டு இருக்கலாம்.
            சொற்களில் ஒளிந்திருக்கும் சூட்சமங்களைப் புரிந்து கொண்டால் சொற்களை அதிகமாகப் பயன்படுத்த மாட்டீர்கள். குறைவாகத்தான் பயன்படுத்துவீர்கள். பயன்படுத்தாமல் கூட இருப்பீர்கள். சொற்களைப் புரிந்து கொள்வதில்தான் ஒளிந்திருக்கிறது அந்த மெளனம்.
*****

4 comments:

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...