நெடுஞ்சாலை மியூசியத்தின் காட்சி
பின்தொடரும்
ஒரு வண்ணத்துப் பூச்சி
வண்ணங்களை
வீசிறியடிக்கிறது
தோற்றுப்
போனதாகச் சொல்லி
மழையென
அழுது புலம்புகிறது வானவில்
வண்ணங்களைப்
பிடிக்க முயலும்
மழலையின்
கைகளுக்கு
நீர்
பட்டு கரையும் வண்ணம் போல்
நழுவி
நழுவி பறக்கிறது வானவில்
வண்ணத்துப்
பூச்சியைப் பிடிக்க முடியாத
வானவில்லை
தொட முடியாத குழந்தை
கடைசியில்
களைத்துப் போய் அமர
தலையில்
வந்து அமர்கிறது வண்ணத்துப் பூச்சி
தலையில்
மகுடமாகிறது வானவில்
இரண்டின்
தலையிலும் செல்லமாய்
ஒரு
குட்டு குட்டி விட்டு
வண்ணத்துப்
பூச்சியாய்ச் சிறகடித்து
வானவில்லாய்
விரிவு கொள்கிறது
நெடுஞ்சாலை
மியூசியத்தின் அன்றைய நாள் காட்சி
*****
No comments:
Post a Comment