17 Apr 2018

நான் - நீ - அவர்கள் - எடுத்துக் கொள்ளும் முறைகள்


நான் - நீ - அவர்கள் - எடுத்துக் கொள்ளும் முறைகள்
            எதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசுங்கள். எல்லாம் சாதாரணமாக இருக்கும். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்படுங்கள். எல்லாம் சாதாரணமாக இருக்கும்.
            எதையும் அசாதாரணமாக எடுத்துக் கொண்டால் அசாதாரணமாகப் பேசுவீர்கள், அசாதாரணமாகச் செயல்படுவீர்கள்.
            எதற்காகவும் கூடுதலாக உணர்ச்சிவசப்படாதீர்கள். அது கூடுதலாக உங்களை முட்டாளாகக் செயல்படுவதைத் தூண்டும்.
            தொடர்ந்து எதையும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவ்வபோது ஓய்வும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வபோது ஓய்வு எடுத்துக் கொள்ளும் நிலம்தான் நல்ல விளைச்சலைத் தருகிறது என்பார்கள்.
            உழைப்பும், ஓய்வும் வைத்தியரின் வாசலை மூடுகின்றன என்ற பழமொழி ஒன்றும் உண்டு.
            உழைப்பைப் போலவே ஓய்வும் போற்றத் தக்கது. மதிக்கத் தக்கது. ஓய்வில்லாத உழைப்பு என்பது இலக்கற்ற பயணம் போன்றது. எந்தப் பயணமும் இலக்கில்லாமல் தொடர்வதில்லை. உழைப்பும் ஓய்வோடுதான் தொடர வேண்டும்.
            நேற்று எஸ்.கே. அன்றைய விளக்கங்கள் எதையும் காலையில் எழுதவில்லை. சாவகாசமாக மெதுவாகத்தான் எழுதினார். முன்பு போல் வேலையில் அலட்டிக் கொள்ளாமல் முடிந்ததை மட்டுமே செய்தார். முடியாத வேலைகளைப் பொருட்படுத்தவில்லை. யாரையும் கட்டுபடுத்த வில்லை.
            அவர்களைச் சுதந்திரமாக இருக்கச் செய்து விட்டார். அவர்களின் விருப்பத்துக்கு விட்ட போது தனக்கு அவர்களால் ஏற்பட்ட தேவையில்லாத தொந்தரவுகள் இல்லாமல் போனது புரிந்தது. அவர் இப்போது யாரையும் கண்டு கொள்வது இல்லை. இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பதில்லை.
            ஒருவருக்கு விருப்பம் இல்லையென்றால் கட்டாயப்படுத்துவது இல்லை. அவரவர்களை அவரவர் போக்கில் விட்டு விடுகிறார். இதனால் அவருக்கு சிலரால் ஏற்பட்ட தேவையற்றப் பிரச்சனைகள் இப்போது ஏற்படுவதில்லை. அவரவர்களை அவரவர் போக்கில் விட்டு விட்டால் யாரும் பிரச்சனைக்கு உரியவர்களாக மாற மாட்டார்கள்.
            யார் வழியில் நாம் குறுக்கிட்டாலும் அவர்கள் நம் வழியில் குறுக்கிடுவார்கள். அவர்கள் அவர்களின் வழியில் போவார்கள். 
            யாரையும் மாற்ற முயற்சித்து சோர்ந்து போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாரையும் திருந்த நினைத்து மன உளைச்சல் அடைய வேண்டியதில்லை. யாரையும் உயர்த்த நினைத்து அவமானப் பட வேண்டியதில்லை.
            அவர்கள் எப்படி இருக்க நினைக்கிறார்களோ அப்படியே அவர்கள் இருக்கட்டும். ஒருவர் சொல்லாவிட்டாலும் எவரேனும் ஒருவர் அவருக்கு அவர் நிலைமை குறித்து சொல்லவே செய்வார்கள். ஆனால் அவர்கள் ஓவர் டோஸ் கொடுத்தால்தான் சரியாவேன் என்கிற பட்டியலில் இருப்பவர்களாக இருப்பார்கள்.
            அதற்காக ஓவர் டோஸ் கொடுக்கும் முயற்சிகளை ஒருவர் எடுக்கக் கூடாது. சில நேரங்களில் ஓவர் டோஸ் மரணத்தைக் கூட விளைவித்து விடலாம். எப்போதும் ஓவர் டோஸ் கொடுக்கும் முயற்சிகள் ஒருவருக்குக் கற்பனையில் கூட வேண்டாம்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...