25 Apr 2018

மிகச் சிறந்த தற்காப்புக் கலை


மிகச் சிறந்த தற்காப்புக் கலை
            உணர்ச்சிகளைத் தூக்கி எறிந்து விட்டு வேலையைப் பார். அவைகள் உள்ளுறுப்புகளைப் பாதிக்கும் என்பதை நம்ப முடிகிறதா?
            வெறுப்போ, எண்ணங்களில் எதிர்ப்போ உடலைப் பாதிக்கும் என்பதை ஏற்க முடிகிறதா?
            உணர்ச்சிவசப்படுபவர்களும், அடுத்தவர்களை அலட்சியப்படுத்தி எரிச்சல்படுத்துபவர்களும் அநேகம். அஃதே பிறவிகுணம் ஆகி விட்ட அவர்களை திருத்த முடியாது.
            உணர்வுகள் வெகுவாக கவலைப்படுத்தலாம். அது புதிதல்ல. வழக்கமாக எப்படி கவலைப்படுகிறீர்களோ, அப்படித்தான் இம்முறையும். ஆனால், புதிததாக கவலைப்படுவதைப் போலத் தோன்றுவதைத் தடுக்க முடியாது.
            சிலரது இயல்பே அப்படித்தான். அவர்களின் சுபாவத்தை நீங்கள் மாற்ற முடியாது. உங்கள் சுபாவத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். யார் நினைத்தாலும் அவரவர் சுபாவத்தை மாற்றிக் கொள்ளலாம். அதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள்தான் நினைத்துப் பார்க்க வேண்டும்.
            சரியாக இருப்பதும், சாத்வீகமாகச் செல்வதும் நல்ல முறைகள். அதற்கு மேல் எதையையும் செய்ய என்ன இருக்கிறது?
            தவறு என்றால் மாற்றிக் கொள்ளலாம். அடுத்தவர்கள் கோபப்படுகிறார்கள் என்பதற்காக சரியானவைகளை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. அது ஒருவகைக் கோழைத்தனம்.
            மாற்றத் தொடங்கினால் ஒவ்வொரு மனிதருக்கும் தகுந்தாற் போல் ஒவ்வொன்றாக மாற்றி கடைசியில் ஒரு சொட்டு மிச்ச மனிதர் அங்கே இருக்க மாட்டார்.
            பிரச்சனைகளுக்குக் காரணம் அதை பிரச்சனையாக எடுத்துக் கொள்ளும் மனமே. பிரச்சனையைப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை என்றால் அது பிரச்சனையே இல்லை.
            பிரச்சனை என்று நினைத்தால் அதை மனம் சிந்தித்துப் பெரிதாக்கும் விதமே வேறு.
            ஒரு மனம் தாக்கப்பட்டால் அது சும்மா இருக்காது. எப்படியெல்லாம் தாக்கும் தெரியுமா? தாக்கிய மனத்தை அழித்தொழிக்காமல் விடாது. நல்ல குணங்களையும் கேவலபடுத்தும். அவமானப்படுத்தாமல் பின்வாங்காது.
            குற்ற உணர்வை உருவாக்கப் பார்க்கும். தாழ்வுணர்வைக் கொள்ளச் செய்யும்.
            அகங்காரத்தை உருவாக்கும். கருத்துகளை அறுக்கும் மோசமான பட்டாக் கத்தி அது.
            அகங்காரத்தோடு போட்டியிட்டால் மேலும் மேலும் அது அதிகமாகுமே தவிர குறையாது. தாக்குதல்கள் படுவேகமாகும்.
            இன்னும் தவறாகப் புரிந்து கொள்ளச் செய்யும்.
            மனதின் சுபாவம் அது.
            மனதோடு வாழ்பவர்களைப் பார்த்தால் விழுந்தடித்து ஓடி விடுங்கள். தப்பித்தலுக்கு அதுவே வழி.
            ஓடுதலைப் போன்ற மிகச் சிறந்த தற்காப்புக் கலை என்ன இருக்கிறது?
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...