7 Apr 2018

பளிச்செனச் சிரிக்கும் நிலைக்கண்ணாடி


பளிச்செனச் சிரிக்கும் நிலைக்கண்ணாடி
பூட்டிக் கிடக்கும் வீட்டின்
உள்ளறையில் இருக்கும் நிலைக்கண்ணாடியில்
காலை முதல் மாலை வரை
இரவு முதல் விடியல் வரை
ஒரே காட்சி மாறி மாறித்
தோன்றி மறைகிறது
சலிப்பூட்டும் ஒரே மாதிரியான காட்சியைப்
பிரதிபலித்து சோர்ந்து போயிருக்கும்
நிலைக்கண்ணாடியை
எப்போதாவது பறந்து வந்து
கொத்தி விட்டுப் போகும் குருவி
பரவசமாக்கி விட்டுப் போகிறது
அலுப்பின் அழுக்கு துடைக்கப்பட்டதாய்ப்
பளச்சென சிரிக்கிறது நிலைக்கண்ணாடி
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...