21 Apr 2018

வாக்குறுதிகளைப் பொறுக்க முடியாதவன்


வாக்குறுதிகளைப் பொறுக்க முடியாதவன்
வாக்குறுதிகளை நம்பி
போராட்டத்தைக் கைவிட்டவன்
மீண்டும் தொடங்குகிறான்
வாக்குறுதிகளின் முடை நாற்றம் தாங்காமல்
மூக்கைப் பொத்திக் கொள்கிறான்
அந்த அகோர அருவத்தைப்
பார்க்க விரும்பாமல்
கண்களை மூடிக் கொள்கிறான்
பிராணணையற்ற வார்த்தைகளைக் கேட்கும்
சொரணையற்ற செவிகளை அடைத்துக் கொள்கிறான்
நாவுக்குள் நுழையும் கசந்த சுவையை
நொடிக்கொரு தரம் காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறான்
வாக்குறுதிகள் அவனைச் சுற்றி
குவிந்து கொண்டிருக்கின்றன
எழுந்து ஓடத் துவங்கும்
அவனைத் துரத்திக் கொண்டு செல்கின்றன
மேலதிக வாக்குறுதிகள்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...