6 Apr 2018

இதுதான் உனக்கான திரைப்படமா என்று சொல்!


இதுதான் உனக்கான திரைப்படமா என்று சொல்!
ரசிகர்களே உமக்காக
கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்
மனத்தின் ஆட்ட நூலை ஆட்ட வல்லார்
அவரின் சோம்பேறித்தனத்தை
அவரை இயக்கும் ஒருவர் புட்டுப் புட்டு வைக்கிறார்
சரியான நேரத்தில் அவரை வைத்து
படப்பிடிப்புக் கருவியை இயக்க முடியவில்லை என்று
புலம்பித் தள்ளுகிறார்
அவரை வைத்து நமக்கேற்ற ரசனையைத்
பரோட்டா சால்னாவாய்த் தயாரித்துத் தருபவர்
எல்லாம் நிறைவுறும் புள்ளியில்
நடித்த பின் குரல் கொடுக்கும் வேலை முடிந்தால்
பார்ட்டி வைத்த போதையில்
புகழ்ந்து தள்ளுவார்கள்
கட்டித் தழுவிக் கொள்வார்கள்
காமிராவுக்குப் பின் நடந்த நடிப்பு நிறைவுபெறும்
இப்போது நீ போதுமான ஓய்வு எடுத்துக் கொள்
அப்போது இதமாக இருக்கும்
பிறகு பார்த்து சொல்
உன் பொழுது போக்கிற்கான திரைப்படம்
இதுதானா என்று?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...