4 Apr 2018

நல்ல தண்ணி

நல்ல தண்ணி
வட்டமாய்ச் சாப்பிட்ட தோசை
செவ்வகமாய்ச் சாப்பிட்ட ரொட்டி
முக்கோணமாய்ச் சாப்பிட்ட சமோசா
சாய்சதுரமாய்ச் சாப்பிட்ட கேக்
வடிவமற்ற பசி
வடிவங்களால் நிறைந்து விட்டது
பாத்திரத்தின் வடிவில் நிறையும்
நீராகாரம்
வடிவமற்ற பசியின் வடிவத்திற்கு
ஏற்றதாக இருக்கிறது
ஏதோ ஒரு வடிவில்
எங்கும் எப்போதும் கிடைத்து விடுவதாக இருக்கும்
நீராகாரத்திற்கான நல்ல தண்ணீருக்கு மட்டும்
உறுதி கொடுங்கள்
எம் அதிகார மீட்பர்களே!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...