3 Apr 2018

மாறாத நிலம்

மாறாத நிலம்
புணர்தலும் புணர்தல் நிமித்தத்திற்காக
குறிஞ்சி
கரண்டிப் போடப்பட்ட
கிரானைட் எச்சங்களாகி விட்டன
அமேசான் காட்டின் அரிய மூலிகைகள்
முல்லைப் புறவை
அபார்ட்மெண்டுகளாக்கி
கட்டில் ஜோடிகள் கலந்து கொண்டிருக்கின்றன
பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக
மாறி விட்ட மருத நிலத்தில்
தாது மணல் அள்ளப்பட்ட
நெய்தல் நிலத்தில்
மாறாது இருப்பது பாலை நிலம் மட்டுமே
டோல்கேட் வழிப்பறிகளும்
பைக்ரேஸ் செயின் பறிப்புகளுமாக
தொடர்ந்து கொண்டிருக்கிறது
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...