குறளதிகாரம் - 12.2 - விகடபாரதி
ஏழு தலைமுறைக்குச்
சொத்து சேர்க்கும் வழிகள்!
எப்படியும்
செல்வம் சேர்க்கலாம்.
பணம் சம்பாதிக்க
ஆயிரம் வழிகள் இருக்கின்றன.
சாமர்த்தியம்
இருந்தால் யாரிடமும் பணம் சேரும்.
வியாபாரத்தில்
கொடி கட்டி பறந்தவர்கள் இருக்கிறார்கள். கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்.
கொள்ளையிட்டு
பெரும் பணம் சேர்த்தவர்கள் இருக்கிறார்கள்.
கையூட்டு
வாங்கி, ஊழல் செய்து பணத்தைக் குவித்தவர்கள் இருக்கிறார்கள்.
உள்நாட்டு
வங்கியில் வெள்ளையாகவும், வெளிநாட்டு வங்கிகளில் கருப்பாகவும் பணத்தை முதலீடு செய்தவர்கள்
இருக்கிறார்கள்.
இனி இந்தப்
பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் மலைத்துப் போய் நிற்பவர்கள் இருக்கிறார்கள்.
தம் முன்னோர்கள்
தேடி வைத்த சொத்து, பணம், நகை போன்றவைகளில் பல எங்கிருக்கிறது என்று தெரியாமலே வாழ்பவர்கள்
இருக்கிறார்கள்.
நேற்று வரை
கோடீஸ்வரராய் இருந்து, இன்று பிச்சைக்காரர்களாய் ஆனவர்கள் இருக்கிறார்கள்.
'பணம் இன்று
இருக்கும், நாளை போகும்' என்று பொதுவாக ஒரு வழக்கைச் சொல்வார்கள்.
உடல் நிலையற்றது.
வாழ்நாள்
நிலையற்றது.
அதே வரிசையில்
செல்வமும் நிலையற்றது.
சேர்த்த செல்வத்தை
அனுபவிக்காமல் இறந்து போனவர்கள் இருக்கிறார்.
தம் காலத்திலே
தாம் சேர்த்த பணம் தமக்குப் பயன்படாமல் போகும் அளவுக்கு நிலையற்றதுதான் ஆக்கம் என்று
சொல்லப்படும் நாம் சேர்த்த வைத்த செல்வம்.
ஆக்கம் எனப்படும்
செல்வம் தமக்குப் பிறகும் தம் சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் பாதுகாவலாக அமைய
வேண்டும்.
பல்வேறு காரணங்களினால்
தம் காலத்திலே தம் கண் முன்னாலே சேர்த்த செல்வம் அழிவதைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.
நிலைமை இப்படியிருக்க
தமக்குப் பின்னால் தம் சந்ததியினருக்கும் தாம் சேர்த்த செல்வம் பயன்படும் வகையில் பாதுகாவலாக
செய்வது சாத்தியமா என்றால்...
சாத்தியம்தான்!
அதற்கான வழிவகைகளை
வள்ளுவர் சொல்கிறார்,
செல்வத்தை
நடுவுநிலையோடு நின்று சேர்த்தால் அச்செல்வம் தமக்கும் மட்டுமன்றி தமக்குப் பின்னே
வரும் தம் சந்தத்திக்கும் பாதுகாவலாக அமையும்.
நடுவுநிலைமை
இன்றி சேர்க்கும் செல்வம் தம் சந்தத்திக்குச் சேராதது மட்டுமல்லாமல் அதைச் சேர்த்தவர்க்கும்
அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமையும்.
செல்வம் சேர்ப்பதில்
நடுவுநிலைமை எனும் அறம் முக்கியம்.
கொள்ளையிட்டுச்
சேர்ப்பதல்ல செல்வம்.
பிறர் உழைப்பின்
வியர்வையை உறிஞ்சிச் சேர்ப்பதல்ல செல்வம்.
பிறர் அறியாமல்
களவாடிச் சேர்ப்பதல்ல செல்வம்.
கையூட்டு
வாங்கி, ஊழல் செய்து சேர்ப்பதல்ல செல்வம்.
பிறர் மனம்
வாட அடித்துப் பிடுங்குவல்ல செல்வம்.
அதிகாரத்தைத்
தவறாகப் பயன்படுத்திச் சேர்ப்பதல்ல செல்வம்.
பிறர் அசந்த
நேரம் பார்த்து ஏமாற்றிச் சேர்ப்பதல்ல செல்வம்.
பிறர் அறியாமையைப்
பயன்படுத்தித் தந்திரமாகச் சேர்ப்பதல்ல செல்வம்.
செப்பமாக
சேர்க்கப்படுவதே செல்வம்.
நடுவுநிலைமை
தவறாமல் சேர்ப்பதே செல்வம்.
உழைத்துச்
சேர்ப்பதே செல்வம்.
நேர்மையாகவும்
திறமையாகவும் சேர்ப்பதே செல்வம்.
முறையாகவும்
சரியாகவும் சேர்ப்பதே செல்வம்.
ஏன் செல்வம்
சேர்ப்பதில் இவ்வளவு செப்பம் எனும் நுட்பம் பேச வேண்டும்?ஏனென்றால் செல்வம்தான் ஆசை
காட்டும். ஆசை காட்டி நடுவுநிலைமை தவறத் தூண்டும். காசுக்காகக் காட்டிக் கொடுக்கப்பட்டவர்தானே
இயேசுநாதர்!
இந்த உலகின்
நடுவுநிலைமை தவறிய தவறுகள் பலவற்றுக்குக் காரணமாக செல்வமே இருப்பதால், நடுவுநிலைமை
தவறாமல் செல்வம் சேர்ப்பதே முதன்மையான அறமாக கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை நடுவுநிலைமை
தவறிச் செல்வம் சேர்த்தால் அதன் விளைவு எப்படியிருக்கும் என்பதை கடுமையாகவே எச்சரிக்க
வேண்டியிருக்கிறது.
வள்ளுவர்
அதனால்தான் கறார் காட்டுகிறார்.
எதற்காக செல்வம்
சேர்க்கிறோம்? தலைமுறைகளுக்காகத்தானே.
அப்படியானால்
அத்தலைமுறைக்கு அது சேர வேண்டும் அல்லவா!
சேர்க்கப்படும்
செல்வம் தலைமுறைகளுக்குச் சென்று சேர வழிகாட்டுவதோடு, அவரவரும் செல்வம் சேர்ப்பதால்
உலகின் அறம் குன்றாமல் இருப்பதற்கும் வழிகாட்ட விழைகிறார் வள்ளுவர்.
ஆம்!
உழைத்துச்
சேர்க்கின்ற காசே ஒட்டுவதில்லை என்று பலர் புலம்புவதுண்டு. உழைக்காமல் சேர்க்கின்ற
காசு எப்படி ஒட்டும்? தமக்கே ஒட்டாத காசு தம் தலைமுறைக்கு எப்படி கிட்டும்?
சேர்க்கின்ற
செல்வம் தம் தலைமுறைக்குப் பாதுகாவலாகச் சென்றால் மட்டுமே அது செப்பமாகச் சேர்க்கப்பட்ட
ஆக்கம். அவ்வாறு சேரவில்லை என்றால், அச்செல்வம் செப்பமின்றிச் சேர்க்கப்பட்ட ஆக்கமே.
செல்வம் சேர்ப்பது
பெரிதல்ல. தம் தலைமுறைக்குச் சேரும் வகையில் செல்வம் சேர்ப்பதே பெரிது. அதற்கு செப்பமோடு
செல்வம் சேர்க்க வேண்டும். நேர்மை அது பிறழாமல், உண்மை அது மாறாமல், நடுவுநிலைமை அது
தவறாமல் செல்வம் சேர்க்க வேண்டும்.
ஏழு தலைமுறைக்கு
செல்வம் சேர்க்க எவராலும் முடியும். அச்செல்வம் ஏழு தலைமுறைக்கும் சென்று சேரும் வகையில்
செல்வம் சேர்க்க நடுவுநிலைமை எனும் செப்பம் உடையவர்களால் மட்டுமே முடியும்.
பத்து தலைமுறைக்குப்
பணம் சேர்ப்பது என்பதை விடவும் பத்து தலைமுறையும் அப்பணத்தை அனுபவிக்க வேண்டும் என்பது
முக்கியம். பத்து தலைமுறைக்குச் சேர்த்தப் பணம் தம் தலைமுறையிலேயே அழியுமானால் அது
சேர்த்தப் பணத்தின் பிழையன்று, பணம் சேர்த்த முறையின் பிழை.
நடுவுநிலைமை
தவறாமல் சேர்க்கப்படும் செல்வமே தலைமுறைகளைத் தாண்டி நிற்கிறது.
செப்பம் உடையவன்
ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
செப்பமின்றிச்
சேர்க்கும் ஆக்கம் தம் காலத்துக்கும் துணை வாராது. தம் தலைமுறைக்கும் சேராது.
*****
No comments:
Post a Comment