19 Apr 2018

வாழ்வுக்குத் தயாரிப்பவர்கள்


வாழ்வுக்குத் தயாரிப்பவர்கள்
உடைந்த நம்பிக்கைக்குள்
புழுதியை வாரிப் பூசுகிறார்கள்
கிடைப்பதை ஏற்றுக் கொண்டு
வாழா விட்டால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்
தானாக சாவது நல்லதில்லை என்று எச்சரிக்கிறார்கள்
இப்படித்தான் வாழ்வு என தெரிந்து
அதிலிருந்து மீள்வதற்கு வழியில்லை என அறிந்து
ஒரு புழுவைப் போல்
கடிப்பதையும் கொட்டுவதையும் மறந்து
சுருட்டிக் கிடப்பதைப் பார்த்து
ஜோராகக் கை தட்டுகிறார்கள்
நாம் வாழ்க்கைக்குத் தயாராகி விட்டதாக.
*****

2 comments:

  1. படைப்பு நன்று.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...