22 Apr 2018

பசியைத் தின்று பார்!


பசியைத் தின்று பார்!
பாத்திரம் நிறைய உணவு உனக்கு
பாத்திரம் நிறைய பசி எனக்கு
உன் தட்டில் உணவு மீதம் இருக்கிறது
என் தட்டில் பசி நிறைந்து கிடக்கிறது
நீ உன் உணவை எடுத்துத் தின்னுவதைப் போல
என்னை என் பசியை எடுத்து தின்னச் சொல்கிறாய்
அவரவர் தட்டில் இருப்பதை
அவரவர் சாப்பிட்ட பின்
குறட்டை விடாமல்
ஏன் கோஷமிடுகிறாய் என்கிறாய்?
என் பசியை ஒரு நாளாவது
தின்று பார்த்திருக்கிறாயா நீ?
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...