20 Apr 2018

எல்லார்க்கும் பெய்யும் மழை


எல்லார்க்கும் பெய்யும் மழை
ஒன்று சேர்ந்து போராடப் போவதாகச் சொன்னவர்கள்
இன்னும் வந்த பாடில்லை
கடைசி நேரத்தில் தனித்து விடப் பட்டு
நம்பிக்கையோடு களமாடச் சென்றவர்கள்
லஜ்ஜையின்றி சுயவேலைப் பார்ப்பதில்
சுய இன்பத் திருப்தி அடைந்து  கொள்பவர்களுக்காக
எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்
மணப்பந்தலுக்கு வராத மணமகன்கள்
தங்களுக்குக் கள்ள கட்டில்களே
போதும் என கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்
போராளிகள் வெயிலில் உருகி வழிந்தோடிக் கொண்டிருக்கிறார்கள்
வழக்கம் போல் எல்லார்க்கும் பெய்யும் மழை
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...