18 Apr 2018

சடமாகிப் போன கிரகம்


சடமாகிப் போன கிரகம்
நான் நிறைய தவறுகளைச் செய்து இருப்பதாக
பிராது செய்து கொண்டேன்
என் மீதான காதலை
நிராகரிக்க முடியாத விரக்தியில் அழத் துவங்கியவள்
பூனைக்குட்டியைப் போல பதுங்கிப் பதுங்கிப் போனாள்
எவ்வளவு தேடியும் அதன் பின்
வெந்நீரில் போடப்பட்ட
பனிக்கட்டியைக் கண்டறிய முடியவில்லை
மறுபடியும் நான் தவறு செய்து விட்டதாக
பிராது செய்து கொண்டேன்
தண்டிப்பதற்கோ, மன்னிப்பதற்கோ
எந்தப் பெண்ணுமில்லாத பெருவெளியில்
சடமென ஒரு கிரகமாய்ச் சுழன்று கொண்டிருப்பதை
அறிந்தவர்கள் அவளிடம் சொல்லுங்கள்
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...