15 Apr 2018

உறை மேல் முகவரி

உறை மேல் முகவரி
கடைசித் தீப்பெட்டியின் கடைசித் தீக்குச்சி
காணாமல் போன பிறகு
இரண்டு சிகரெட்டுகள் அழிய முடியாத
ஆற்றாமையில் புதையுண்டுப் போயின
ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்
ஒரு தொல்பொருள் ஆய்வாளன் கையில் சிக்கிய
அவைகள் இரண்டும்
தங்களைக் கொழுத்தி அவனுடைய வாயில்
வைத்துக் கொள்ளுமாறு கெஞ்சின
பயந்து போன அவன்
தற்கொலைக்கு முயன்றதாக
வெண்சுருட்டுகள் இரண்டையும்
நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டு
ஓட்டம் பிடித்தான்
எரிந்துப் போக முடியாத
சிறை வாழ்க்கையை எண்ணி
அழ ஆரம்பித்தன இரண்டு சிகரெட்டுகளும்
எச்சமாய் எங்கோ காணாமல் போய்
ஒதுங்கிக் கிடந்து கண்டெடுக்கப்பட்ட
கடைசித் தீப்பெட்டியின் உறை
காயசித்திப் பெட்டகமா என்பது குறித்த
ஆய்வுகள் தொடங்கியிருந்தன
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...