12 Apr 2018

ஆதி மண்ணின் முலைப்பாலைத் தொலைத்த மரம்


ஆதி மண்ணின் முலைப்பாலைத் தொலைத்த மரம்
மழைக்காலத் தட்டான்களைப் போல ஆன
உன் பால்ய காலத்தை
புத்தகங்களின் சிலுவையில் அறைந்து கொன்றோம்
படிக்கும் இயந்திரம் போல ஓயாமல் இறைந்து கொண்டு
நீ படித்துக் கொண்டிருந்தாய்
பல வகை நுழைவுத் தேர்வுகளின் வாதைகளில்
புற்றுக்குள் நுழையும் பாம்பு போல
புறப்பட்டு வந்தாய்
உன் ஆசை அபிலாஷைகளால் ஆன மரத்தின் வேர்கள்
சுதந்திரத்தைத் தேடியது
அந்தோ பார் ஒரு தொட்டிக்குள்
கொண்டை போட்ட தலைமயிரைப் போல் சுருட்டிக் கொண்டது
நீ வளர்ந்து விட்டாய் என் செல்ல மரமே
தொட்டியிலிருந்து உன்னைப் பெயர்த்து
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் என்று
எங்கு வேண்டுமானாலும் நடலாம்
ஆதி மண்ணின் முலைப்பால் வாசனையை
தயவு செய்து இனி தேடாதே!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...