1 Apr 2018

காமெடி டிராஜிடி


காமெடி டிராஜிடி
            அவர் அடித்தால் வாங்கிக் கொண்டு செல்வார், மீண்டும் கூப்பிட்டு மிரட்டினால் வீட்டுக்கு ஓடுவார் என்பது எஸ்.கே. எதிர்பாரதது ஒன்று. அதற்குப் பின் எஸ்.கே. அவசரப்பட்டு எதாவது செய்து இருந்தால் அது முட்டாள்தனத்தின் சாட்சியமாக அமைந்திருக்கும். எஸ்.கே. அமைதியாக இருந்து விட்டார்.
            பெரும் பிரச்சனையும் அதன் பின் அமைதியாக ஒரு வாறாக முடிந்து விட்டது. மக்களின் மனப் போக்கையும் அனுசரித்துதான் நடத்து கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அதே மக்களால் பாதுகாப்பின்மையை உணர வேண்டியிருக்கிறது.
            சில தொடக்கங்களைச் சிலரிடமிருந்து ஆரம்பிக்கக் கூடாது. அப சகுனம் பிடித்தது போல முடியாது என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விடுவார்கள். அதன் பின் எவ்வளவு முயன்றாலும் அந்தக் காரியத்தை நிறைவேற்றவே முடியாமல் போய் விடுகிறது. எஸ்.கே.வுக்கு இப்படி ஒரு பிரச்சனை எப்போதும் உண்டு.
            சில ரகசியங்களை எப்போதும் ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். அவைகளைச் சொல்வதன் மூலம் நேர்மையாளராக புகழப்படுவதற்கு வாய்ப்பில்லை. ரகசியத்தைக் கசிய விட்டதற்கானத் தண்டனையைத்தான் மறைமுகமாக அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இது எஸ்.கே.வுக்கு நேரிடும் மற்றொரு பிரச்சனை.
            யாரிடமாவது நல்லவர் என்ற பெயர் வாங்க வேண்டிய நிலையில் இருந்தால் எஸ்.கே. கெட்டவராக இருப்பதாகத்தானே அர்த்தம்!
            யாரிடமும் யாரும் நல்லவர் என்ற பட்டம் வாங்க வேண்டியதில்லை. அது காரியம் சாதிப்பதற்கானது. ஏதோ காரியம் சாதித்தாரா எஸ்.கே.? அத்தோடு விட்டு விடுவாராக எஸ்.கே. அதற்குப் பின் அந்த நல்லப் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்காமல் இருப்பாராக எஸ்.கே. நீங்கள் உங்களுக்கானச் சுதந்திரத்தோடு இருங்கள் என்று சொன்னாலும் இது எஸ்.கே.வுக்கானப் பிரத்யேகமானது என்பது நீங்கள் அறியாததன்று.
            மற்றவர்களிடம் அதிகக் கட்டுபாடுகளை விதிக்கும் போது எஸ்.கே. அதிக மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஒரு கட்டுபாடான சூழ்நிலை இருப்பது போல ஒரு பம்மாத்து செய்வதே எளிதாக இருக்கிறது. மாறாக கட்டுபாட்டைக் கட்டாயப்படுத்தித் திணிக்கும் போது அது எஸ்.கே.வுக்கும் நல்லதாக இல்லை, அவர்களுக்கும் நல்லதாக இல்லை.
            அதுவும் தவிர சில பலச் சூழ்நிலைகள் சரியில்லை. குறிப்பாக மையத்தில் இருப்பவர்கள். எஸ்.கே.வுக்கு என்று இருக்கும் ஒரு சில மையங்களால் சித்திரவதைகள் வந்து சேர்கின்றன. அது போன்ற நிலைமைகளில் எஸ்.கே.வும் தனக்கென்ன என்று இருந்தால்தான் தப்பிக்க முடிகிறது.
            ஒரு மிக மோசமான மையத்தின் கீழ் மிக நன்றாகச் செயல்படுவது என்பது எப்போதும் ஒரு சவாலானதே. தேவையில்லாமல் அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தேவையில்லை.
            எஸ்.கே. சரியாகத்தான் இருக்கிறார். நேக்காக ஒரு மாதிரியாக ஓட்டிக் கொண்டு வருகிறார். இடையில் யார் யாரோ சொல்கிறார்கள் என்று அதன்படி நடப்பது போல நடிக்காமல் அப்படியே செயல்படுத்தியதன் விளைவு எஸ்.கே.வுக்குத் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. எவ்வளவுதான் சீரியஸ் என்றாலும் அதிலுமே பட்டும் படாமல் நடக்கும் போது, பட்டும் படாமல் நடக்க வேண்டியதில் சீரியஸாக நடக்க வேண்டியதில்லை.
            எல்லாவற்றையும் ஒரு காமெடியாகச் செய்யலாம். சீரியஸ் என்றால் எஸ்.கே.வுக்கு டிராஜிடிதான்.
            எந்தச் சூழ்நிலையில் எஸ்.கே. இப்படிச் சிந்திக்கிறார் என்பது ஒரு புதிர்தான். விடுகதை என்றும் சொல்லலாம். விடுகதைக்கான முடிச்சை கேட்பவர்கள்தானே (இந்நிலையில் படிப்பவர்கள்) அவிழ்க்க வேண்டும்!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...