1 Apr 2018

உப்புக்கட்டியின் கண்ணீர்

உப்புக்கட்டியின் கண்ணீர்
நீர்ப்பயணம் செய்யும்
ஓர் உப்புக் கட்டி மிகுந்த சந்தோசமாயிருக்கிறது
இடமும் வலமும் அசைந்து
மேலும் கீழும் துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறது
சற்று நேரத்தில் கரைந்து காணாமல் போன
உப்புக்கட்டி, "பாருங்கள்! பாருங்கள்!"
நீரோடு நீராகிப் பயணிக்கிறேன் என்கிறது
நமக்குதான் கண்களுக்குத் தெரியவில்லை
உப்புக்கட்டி பொய் சொல்கிறது என்று
நாமெல்லாம் கோபப்படத் துவங்குகிறோம்
நிஜமாகவே காணாமல் போய் விடுவது
நல்லது என அழத் துவங்குகிறது உப்புக்கட்டி.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...