29 Mar 2018

உன் எண்ணை நீயே பெற்றுக் கொள்


உன் எண்ணை நீயே பெற்றுக் கொள்
உன் அலைபேசி எண்களால்
உன்னை அழைத்துப் பார்க்கிறேன்
நீ சமிக்ஞை இல்லாத இடத்தில்
இருப்பதாகச் சொல்கிறது
சிறிது நேரம் கழித்து
தொடர்பு கொள்ளுமாறு கெஞ்சுகிறது
இடையில் சமிக்ஞை கிடைக்கும் பொழுதுகளில்
நீ யாருடனோ பேசிக் கொண்டு இருப்பதாக
சுரத்தையில்லாமல் சொல்கிறது
காத்திருந்து மீண்டும் முயற்சிக்கையில்
நீ ஸ்விட்சுடு ஆப்பில் இருக்கிறாய் என்கிறது
ஓர் அதிர்ஷ்டங் கெட்ட எண்ணோடு வாழ்வது
கடினமாக இருக்கிறது
உன் எண்ணை நீயே பெற்றுக் கொள்
உன்னைத் தொடர்பு கொள்ளாமல் இருப்பதில்
கொஞ்சம் சூடு குறையட்டும்
என் அலைபேசிக் கருவி.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...