25 Mar 2018

போஸ்ட் மார்டனிசம்


டிசைன்
காவிரியில எப்போ தண்ணி வரும்
மேலாண்மை வாரியம் அமைச்ச பிற்பாடு
அதை எப்போ அமைப்பீங்க
காவிரியில தண்ணி வர்றப்போ
*****
போஸ்ட் மார்டனிசம்
வீட்டுல செத்திருந்தார்னா
எப்படிச் செத்தார்னு
தெரிஞ்சிருக்கும்
அப்பாலே
ஆஸ்பத்திரியில சேர்த்ததுல
அதுவும் தெரியல
*****
இருப்பு
முன்பொரு காலத்தில்
கடல் இருந்த இடத்தில்
மலை இருக்கிறது
மலை இருந்த இடத்தில்
கடல் இருக்கிறது
வயல் இருந்த இடத்தில்
வீட்டுமனை இருக்கிறது
வீட்டு மனை இருந்த இடத்தில்
வயல் இருக்கும்
பின்பொரு காலத்தில்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...